Enable Javscript for better performance
திருவண்ணாமலை நகராட்சிக் கடைகளுக்கான வாடகை உயர்வைக் கைவிட வேண்டும்: எ.வ.வேலு எம்எல்ஏ வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை நகராட்சிக் கடைகளுக்கான வாடகை உயர்வைக் கைவிட வேண்டும்: எ.வ.வேலு எம்எல்ஏ வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 25th July 2018 09:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை நகராட்சி வணிக வளாகக் கடைகளுக்கான அதிகப்படியான வாடகை உயர்வை நகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும் என்று தொகுதி எம்எல்ஏ எ.வ.வேலு வலியுறுத்தினார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம், ஜோதி சந்தை, தண்டராம்பட்டு சாலை, முத்துவிநாயகர் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சிக்குச் சொந்தமான சுமார் 200 சிறிய வணிக வளாகக் கடைகள் உள்ளன. 
    இந்தக் கடைகளை குத்தகை எடுத்த சிறு வணிகர்கள் நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வாடகையை தவறாமல் செலுத்தி வருகின்றனர்.
    3 ஆண்டுகளுக்கு ஒரு முறை 15 சதவீதம் வாடகை உயர்த்தி நிர்ணயிக்கப்படும் நிலையில், அதையும் செலுத்தி வருகின்றனர். இந்த வாடகைத் தொகையை தற்போது செலுத்தும் தொகையில் இருந்து 500 முதல் 1,000 சதவீதம் வரை உயர்த்தி, இதை 2016 ஜூலை 1-ஆம் தேதியில் இருந்து செலுத்த வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
    உதாரணமாக 80 சதுரடி அளவுள்ள ஒரு கடைக்கு தற்போது செலுத்தும் வாடகை ரூ.1,746 எனில் உயர்த்தப்பட்ட வாடகை ரூ.10,067 ஆகும். இந்தத் தொகையை 1.7.2016 முதல் செலுத்த வேண்டுமானால், செலுத்த வேண்டிய மொத்தத் தொகை ரூ.1,20,000 ஆகும்.
    நகராட்சிக் கடைகளில் நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகவே வியாபாரமாகும். இந்த நிலையில், சிறு வணிகர்கள் எப்படி ரூ.1.20 லட்சத்தை செலுத்த முடியும். தமிழகத்திலேயே வேறு எந்த நகராட்சியிலும் இதுபோன்று கடை வாடகை உயர்த்தப்படவில்லை.
    திருவண்ணாமலை நகராட்சி விதித்திருக்கும் இந்த வாடகை வணிகர்களின் வாழ்க்கையை நசுக்கும் விதமாக உள்ளது. எனவே, இந்த வாடகை உயர்வை நகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும். இல்லாவிட்டால், நகராட்சி அலுவலகம் எதிரே தனது தலைமையில் மிகப்பெரியப் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai