Enable Javscript for better performance
தேசிய ஊரக வேலைத் திட்ட நிதியைமத்திய அரசு வழங்கக் கோரி போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தேசிய ஊரக வேலைத் திட்ட நிதியைமத்திய அரசு வழங்கக் கோரி போராட்டம்

    By DIN  |   Published on : 25th July 2018 09:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளுக்கான நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என திருவண்ணாமலையில் நடைபெற்ற தொடர் முழக்கப் போராட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
    அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், வேலை கேட்டு மனு அளிக்கும் தொடர் முழக்கப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.கணபதி தலைமை வகித்தார்.
    மாவட்ட துணைத் தலைவர்கள் ஏ.நடராஜன், கே.கே.வெங்கடேசன், பி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாவட்டச் செயலர் எம்.பிரகலாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எம்.சிவக்குமார், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் வி.சுப்பிரமணி, சிஐடியு மாவட்டச் செயலர் இரா.பாரி, மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலர் எஸ்.லூர்துமேரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலர் பி.சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
    போராட்டத்தில், தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தின்கீழ் நடைபெறும் பணிகளுக்கான நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலைக்கான அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். 
    வேலை கேட்டு மனு அளிக்கும் அனைவருக்கும் 15 நாள்களுக்குள் வேலை வழங்க வேண்டும்.
    சட்டக் கூலி ரூ.224-ஐ முழுமையாக வழங்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களை உடனடியாக தூர்வார வேண்டும் என்பன உள்பட 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் ஏராளமான விவசாயத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai