Enable Javscript for better performance
பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு கருத்தரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை குமரன் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    தொடக்க விழாவுக்கு கல்லூரி துணைத் தலைவர் எ.வ.குமரன் தலைமை வகித்தார். கல்லூரி இயக்குநர் பொன்.முத்து, ஆலோசகர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் அண்ணாதுரை வரவேற்றார். ஒசூர் தனியார் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி ரமேஷ், மற்றொரு தனியார் நிறுவனத்தின் அதிகாரி பிரபாகர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு படிக்கும்போதே வேலைவாய்ப்பு பெறுவது எப்படி என்பது குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளித்தனர்.
    மேலும், ஆங்கிலம் பேசும் திறனை எவ்வாறு வளர்த்துக் கொள்வது என்பது குறித்தும் அவர்கள் விளக்கினர். இதில், கல்லூரியின் வேலைவாய்ப்பு அதிகாரி ராஜமூர்த்தி மற்றும் 300-க்கும் மேற்பட்ட இறுதியாண்டு மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai