Enable Javscript for better performance
பெரியேரியில் பாரம்பரிய விதைத் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு, களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கம் இணைந்து பாரம்பரிய விதைத் திருவிழாவை நடத்தின.
    திருவண்ணாமலையை அடுத்த பெரியேரி கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த விழாவுக்கு பெண்கள் இணைப்புக் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுமதி தலைமை வகித்தார். 
    திருநெல்வேலியைச் சேர்ந்த இணைப்புக் குழு நிர்வாகி பொன்னுத்தாய், ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் பழனி, இயற்கை விவசாயி ரகுபதி ஆகியோர் கருத்துரை வழங்கினர். பாரம்பரிய விதைகள் எந்தச் சூழலிலும் வளரும். மக்களுக்கு ஆரோக்கியமானது. குறைவான நீரில் பயிர் செய்யலாம். எனவே, பாரம்பரிய விதைகளை நாம் பாதுகாக்க வேண்டும் என்று கருத்துரை வழங்கியவர்கள் கிராம மக்கள், பெண்களிடையே வலியுறுத்தினர்.
    முன்னதாக, பாரம்பரிய நெல் விதைகள், சிறுதானியங்கள், பயறு வகைகள் அடங்கிய 29 வகையான விதைகளை கிராம பெண்கள் தங்கள் தலைகளில் சுமந்தபடி கிராமத்தில் ஊர்வலமாக வந்தனர். 
    அப்போது, பாரம்பரிய விதைகளை பாதுகாப்போம் என்று அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.  இதில், 200-க்கும் மேற்பட்ட பெண் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai