Enable Javscript for better performance
போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலையில் நடைபெற்ற தமிழ்நாடு பொன் விழா ஆண்டு விளையாட்டுப் போட்டிகளில் வென்ற ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
    தமிழ்நாடு பொன்விழா ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட அளவிலான 21 வயதுக்கு உள்பட்டவர்களுக்கான தடகளப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.
    இதில், ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளான பி.சரண்குமார், எஸ்.ஜமாலுதீன், பி.கார்த்திகேயன், வி.ஜீவா, எஸ்.அமுலு, பி.கிருத்திகா, இ.ரம்யா ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றனர். போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளர் வி.பவன்குமார், பள்ளிச் செயலர் டி.எஸ்.ராஜ்குமார், பொருளாளர் டி.வசந்த்குமார், ஆங்கில வழிச் செயலர் டி.ஸ்ரீஹன்ஸ்குமார், தமிழ் வழிச் செயலர் வி.சுரேந்திரகுமார், அறக்கட்டளை உறுப்பினர்கள் வி.ஜெய்சந்த், எஸ்.ராஜேந்திரகுமார், டி.வி.சுதர்சன், டி.வி.நரேந்திரகுமார், முதுநிலை ஆசிரியர் எம்.ராமகிருஷ்ணன், நிர்வாக அலுவலர் என்.ஆர்.மணி, உடல் கல்வி ஆசிரியர் எம்.ரமேஷ் உள்ளிட்டோர் திங்கள்கிழமை பாராட்டி பரிசு வழங்கினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai