Enable Javscript for better performance
போளூரில் ஆகஸ்ட் 1 முதல் நெகிழி பயன்படுத்தத் தடை: செயல் அலுவலர் துண்டுப் பிரசுரம் விநியோகம்- Dinamani

சுடச்சுட

    

    போளூரில் ஆகஸ்ட் 1 முதல் நெகிழி பயன்படுத்தத் தடை: செயல் அலுவலர் துண்டுப் பிரசுரம் விநியோகம்

    By DIN  |   Published on : 25th July 2018 09:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போளூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் நெகிழி (பிளாஸ்டிக்) பொருள்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக துண்டுப் பிரசுரங்களை கடைகள், வணிக நிறுவனங்களில் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெசிமாபானு செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
    போளூரில் பழைய பஜார், சிந்தாதரிப்பேட்டை தெரு, ஜமுனாமரத்தூர் சாலை, புதிய பேருந்து நிலையம், வேலூர் - திருவண்ணாமலை சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள உணவகங்கள், மளிகைக் கடைகள், வணிக வளாகங்கள், பலகாரக் கடைகளில் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெசிமாபானு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். மேலும், நெகிழிப் பைகளில் சுடான உணவு வகைகளை கட்டுவதால் வேதிவினை ஏற்பட்டு மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதாகவும், நெகிழிப் பைகள் மண்ணில் மக்குவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆவதால், அவற்றால் சுற்றுச்சூழலுக்கும், நிலத்தடி நீர்மட்டத்துக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும் ஜெசிமா பானு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
    அப்போது, துப்புரவு ஆய்வாளர் சோமு, தலைமை எழுத்தர் எழிலரசி மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai