Enable Javscript for better performance
மாற்றுத் திறனாளிகளுக்கான  விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    செங்கத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    செங்கம் அனைவருக்கும் கல்வி இயக்கம், வட்டார வளமையம் சார்பில், மாற்றுத் திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்க்கக் கோரி, விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) அன்பழகி வரவேற்றார். கூடுதல் வட்டாரக் கல்வி அலுவலர் செல்வம் முன்னிலை வகித்தார்.
    செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் காமத், விழிப்புணர்வுப் பேரணியைத் தொடக்கிவைத்தார். இதில், மேல்பாளையம் அரசு தொடக்கப் பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு இராஜ வீதி, பெருமாள் கோயில் தெரு, போளூர் சாலை வழியாகச் சென்று மாற்றுத் திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்கக் கோரி விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பிச் சென்றனர்.
    இதில், அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கிருஷ்ணன், ஜேம்ஸ்எட்வார்ட் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள், மாற்றுத் திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai