Enable Javscript for better performance
முத்துமாரி அம்மன் கோயிலில் கூழ்வார்த்தல் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசியை  அடுத்த   மாம்பட்டு அண்ணா நகரில் அமைந்துள்ள மஹாசக்தி ஸ்ரீமுத்துமாரி அம்மன் கோயில், ஆதிசக்தி ஸ்ரீசர்வமங்கள காளி சக்தி பீடத்தில் 38-ஆம் ஆண்டு கூழ்வார்த்தல் திருவிழா திங்கள்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடைபெற்றது.
    இதையொட்டி, திங்கள்கிழமை காலை கோ பூஜை, விநாயகர் வழிபாடு, 108 யாககுண்ட வேள்வி நடைபெற்றன. தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை மூலவர் முத்துமாரி அம்மனுக்கு மகா அபிஷேகம், காப்பு கட்டுதல் நடைபெற்றன.
    பின்னர், குளக்கரையிலிருந்து அம்மன் சக்தி கரகம் வீதியுலா நடைபெற்றது. இத்துடன் 303 பெண்கள் பால்குடங்களை தலையில் ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர். தொடர்ந்து, அம்மனுக்கு பாலாபிஷேகம், கூழ்வார்த்தல் விழா ஆகியவை நடைபெற்றன.
    மேலும், ஸ்ரீமுத்துமாரியம்மன் அன்னதான குழுவினரால் அன்னதானம் நடைபெற்றது. விழாவில் கோயில் அறக்கட்டளைத் தலைவர் ஏ.எஸ்.சங்கர், செயலர் ஆறு.இலட்சுமண சுவாமிகள், பொருளாளர் ர.செல்வம் மற்றும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai