Enable Javscript for better performance
அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு

    By  ஆரணி,  |   Published on : 26th July 2018 09:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரணமல்லூரில் அதிமுக போளூர் சட்டப் பேரவைத் தொகுதி, பெரணமல்லூர் ஒன்றியம், பேரூராட்சி நிர்வாகிகள், செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
     கூட்டத்துக்கு மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான தூசி கே.மோகன் தலைமை வகித்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒன்றியச் செயலர் ஜி.செல்வராஜ் செய்திருந்தார். சிறப்பு விருந்தினராக கழக அமைப்புச் செயலரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசுகையில், வரும் மக்களவைத் தேர்தலில் அதிக தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற கட்சி நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்ற வேண்டும். கட்சியில் அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றார்.
     கூட்டத்தில், கழக அமைப்புச் செயலரும், முன்னாள் அமைச்சருமான முக்கூர் என்.சுப்பிரமணியன், மாவட்ட அவைத் தலைர் ஜெமினி கே.ராமச்சந்திரன், முன்னாள் மாவட்டச் செயலர் தெள்ளார் சி.சீனிவாசன், மாவட்ட இணைச் செயலர் விமலா மகேந்திரன், எம்ஜிஆர் மன்ற நிர்வாகி டி.கே.பி.மணி, ஆரணி ஓன்றியச் செயலர் பிஆர்ஜி.சேகர், மாவட்ட பாசறைச் செயலர் கஜேந்திரன், மாவட்ட மகளிரணிச் செயலர் குமுதவள்ளி, ஆரணி பாரி பி.பாபு, பேரூராட்சிச் செயலர் ஆர்.மூர்த்தி, ஒன்றிய துணைச் செயலர் முனியன், ஒன்றிய அவைத் தலைவர் கஜேந்திரன், பொன்னிஇராஜேந்திரன், கற்பகம், சிவஞானம், வீரபத்திரன், கோவிந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai