Enable Javscript for better performance
அரசுப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    அரசுப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம் தொடக்கம்

    By  செங்கம்,  |   Published on : 26th July 2018 09:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுப்பாளையம் ஒன்றியம், முன்னூர்மங்கலம் அரசு நடுநிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
     இதையொட்டி, தமிழர்களின் பண்பாடு, தமிழர்கள் அணியும் உடை தொடர்பாக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, கும்மி பாட்டு, நடனம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
     பின்னர், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகங்களை தலைமை ஆசிரியர் பழநி வழங்கினார். தொடர்ந்து, திருக்குறளின் பெருமைகள் குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்துக் கூறினார். தமிழ் கும்மிப்பாட்டுக்கு நடனமாடிய மாணவிகளுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் பழநி பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், கிராம கல்விக்குழு உறுப்பினர் உள்பட ஊர் முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai