Enable Javscript for better performance
கார்கில் போர் வெற்றி விழாக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் நலச் சங்கம் சார்பில், கார்கில் போர் வெற்றி விழாக் கூட்டம் திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்கால் பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது.
     கூட்டத்துக்கு ராணுவ மருத்துவ அதிகாரி பிரிகேடியர் ரவிமுனுசாமி தலைமை வகித்தார். சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கருணநிதி, மாநில துணைத் தலைவர் எம்.தில்லன், மாநில பொருளாளர் கே.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலர் எஸ்.தங்கதுரை வரவேற்றார்.
     சிறப்பு அழைப்பாளர்களாக சாந்தி கு.பிச்சாண்டி, முன்னாள் ராணுவ வீரர் நல உதவி இயக்குநர் சி.விஜயகுமார், உதவி ஆணையர் (கலால்) தண்டாயுதபாணி, மாவட்ட நீதிபதி (ஓய்வு) கிருபாநிதி, அதிமுக தெற்கு மாவட்ட கழகச் செயலர் பெருமாள் நகர் கே.ராஜன், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலர் அருள்பழனி, மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறைச் செயலர் சத்ய சிவக்குமார், முன்னாள் நகர மன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன், டாக்டர் எ.வ.வே.கம்பன், எழுத்தாளர் ந.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
     முன்னதாக, பாரத மாதா படத்துக்கு சிறப்பு அழைப்பாளர்கள், சங்க நிர்வாகிகள் மலர் தூவி வீர வணக்கம் செலுத்தினர். விழாவில், சிறப்பு விருந்தினர்களுக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் நலச் சங்கம் சார்பில் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவையொட்டி, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
     இதில், மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் நலச் சங்க நிர்வாகிகள், அவரது குடும்பத்தினர், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை எழுத்தாளர் உமாதேவி பலராமன் தொகுத்து வழங்கினார். திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகி செந்தில்குமார் நன்றி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai