Enable Javscript for better performance
குப்பைத் தொட்டியை அகற்றக் கோரி இந்திய சமூக ஜனநாயக கட்சியினர் தர்னா- Dinamani

சுடச்சுட

    

    குப்பைத் தொட்டியை அகற்றக் கோரி இந்திய சமூக ஜனநாயக கட்சியினர் தர்னா

    By  வந்தவாசி,  |   Published on : 26th July 2018 09:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வந்தவாசியில் அம்மா உணவகம் அருகே குப்பைகளை உரமாக்கும் திட்டத்துக்காக அமைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டியை அகற்றக் கோரி, இந்திய சமூக ஜனநாயக கட்சியினர் வந்தவாசி நகராட்சி அலுவலகம் முன் புதன்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     வந்தவாசி நகராட்சி சார்பில், குப்பைகள் உருவாகும் இடத்திலேயே அவற்றை உரமாக்கும் திட்டத்தின்கீழ், வந்தவாசி வட்டாட்சியர் அலுவலக சாலையில் உள்ள அம்மா உணவகம் அருகில் ரூ.50 ஆயிரத்தில் குப்பைத்தொட்டி கட்டப்பட்டது. பஜார் வீதி, காய்கனி சந்தை ஆகியவற்றில் சேரும் மக்கும் குப்பைகள் கடந்த சில நாள்களாக இந்த குப்பைத் தொட்டியில் கொட்டப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்தக் குப்பைத் தொட்டியினால் அந்தப் பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாகவும், குப்பைத் தொட்டியை உடனடியாக அகற்றக் கோரியும் மாவட்டச் செயலர் ஏஜாஸ்அகமது தலைமையிலான இந்திய சமூக ஜனநாயக கட்சியினர் வந்தவாசி நகராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனர். மேலும், அலுவலக வாயில் முன் அமர்ந்து தர்னா போராட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டனர்.
     தொடர்ந்து, நகராட்சி ஆணையர் எஸ்.பார்த்தசாரதி மற்றும் வந்தவாசி தெற்கு போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai