Enable Javscript for better performance
சந்திரகிரகணம்: படைவீடு ரேணுகாம்பாள் கோயிலில் நாளை நடை அடைப்பு- Dinamani

சுடச்சுட

    

    சந்திரகிரகணம்: படைவீடு ரேணுகாம்பாள் கோயிலில் நாளை நடை அடைப்பு  

    By  போளூர்,  |   Published on : 26th July 2018 09:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சந்திரகிரகணம் காரணமாக போளூரை அடுத்த படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் வெள்ளிக்கிழமை (ஜூலை 27) இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்தது.
     போளூரை அடுத்த படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் ஆடி வெள்ளி விழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வரும் வெள்ளிக்கிழமை 2-ஆம் வெள்ளி விழா நடைபெற உள்ளது. அன்றைய தினம் சந்திரகிரகணம் என்பதால், 2-ஆம் வெள்ளிக்கிழமை சுவாமி வீதியுலா வழக்கத்துக்கு மாறாக மாலை 4.30 மணிக்கு நடைபெறும்.
     இரவு 8.30 மணிக்குள் விழா முடிக்கப்பட்டு, கோயில் நடை அடைக்கப்படும். வரும் சனிக்கிழமை சந்திரகிரகண சாந்தி பூஜை செய்யப்பட்டு, காலை 8.30 மணிக்குப் பிறகு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai