Enable Javscript for better performance
சாலையில் சுற்றித் திரிந்த காட்டு யானை..!- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த பட்டறைகாடு அருகே போளூர் - ஜமுனாமரத்தூர் சாலையில் வயதான ஒற்றை ஆண் யானை புதன்கிழமை சுற்றித் திரிந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
    பட்டறைகாடு அருகே போளூர் - ஜமுனாமரத்தூர் சாலையில் ஒரு தந்தத்துடன் கூடிய வயதான ஒற்றை காட்டு யானை தார்ச் சாலையில் நடந்து சென்றது. 
    அப்போது, பேருந்துகளிலும், வாகனங்களிலும் சென்றுகொண்டிருந்த பயணிகள், பொதுமக்கள் அச்சமடைந்தனர். சத்தம் எழுப்பி யானையை காட்டுக்குள் விரட்ட முயன்றனர். சில இளைஞர்கள் தங்களது செல்லிடப்பேசியில் யானையை படம் பிடித்தனர்.
    இதுகுறித்து வனத் துறை அலுவலர்கள் கூறியதாவது: இக்காட்டு யானை ஜவ்வாதுமலையில் கடந்த 2012-ஆம் ஆண்டு 6 யானைகளுடன் சுற்றித்திரிந்தது. கடந்த சில ஆண்டுகளாக இந்த யானை மட்டும் ஜவ்வாதுமலை, ஆம்பூர், திருப்பதி பகுதிகளிலுள்ள காடுகளில் சுற்றித் திரிகிறது. 
    இந்த யானையால் எந்தவித சேதமும் ஏற்பட்டதில்லை. இந்த யானை வரும், போகும். இதைக் கண்டு பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai