Enable Javscript for better performance
செங்கத்தில் முறையாக செயல்படாத இ - சேவை மையம்: பொதுமக்கள் அவதி- Dinamani

சுடச்சுட

    

    செங்கத்தில் முறையாக செயல்படாத இ - சேவை மையம்: பொதுமக்கள் அவதி

    By DIN  |   Published on : 26th July 2018 09:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பழுதடைந்த எலக்ரானிக் பொருள்களைக் கொண்டு செயல்பட்டு வரும் இ-சேவை மையத்தால் அவதியடைந்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
     செங்கம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இ - சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் ஆதார், வாக்காளர் அட்டைகளை திருத்தம் செய்யும் பணியிலும், புதிதாக எடுத்துக் கொடுக்கும் பணியிலும் தற்காலிக ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
     இந்த மையத்தில் எலக்ரானிக் பொருள்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன், பழுதடைந்த பொருள்களை உடனடியாக சரிசெய்யாததால் இங்கு தினந்தோறும் வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை எடுக்க வருவோர் அலைக்கழிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
     எனவே, இந்த மையத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வதுடன், தேவையான எலக்ரானிக் பொருள்களை வழங்கவும், பழுதடைந்த பொருள்களை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்கம் நகர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai