Enable Javscript for better performance
நிலத் தகராறு: விவசாயியை அரிவாளால் வெட்டிய 2 பெண்கள் கைது- Dinamani

சுடச்சுட

    

    நிலத் தகராறு: விவசாயியை அரிவாளால் வெட்டிய 2 பெண்கள் கைது

    By DIN  |   Published on : 26th July 2018 09:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்கம் அருகே நிலத் தகராறில் விவசாயியை அரிவாளால் வெட்டிய 2 பெண்களை போலீஸார் கைது செய்தனர்.
     செங்கத்தை அடுத்த தீத்தாண்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி விஜயராஜ் (40).
     இவருக்கும், இவரது பக்கத்து நிலத்தின் உரிமையாளரான அலமேலுவுக்கும் வரப்பு தொடர்பாக தகராறு இருந்து வந்ததாம். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை விஜயராஜுக்கும், அலமேலுவுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டபோது, இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாகத் தெரிகிறது.
     இதைப் பார்த்த அலமேலுவின் மருமகள் சுதா (30), அரிவாளால் விஜயராஜை வெட்ட முயன்றாராம்.
     இதை விஜயராஜ் தடுத்தபோது, அவரது கை விரல்கள் மூன்று சம்பவ இடத்திலேயே துண்டாகின.
     விஜயராஜ் உடனடியாக செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
     அவர் அளித்த புகாரின்பேரில், செங்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அலமேலு, சுதா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai