Enable Javscript for better performance
நெகிழி பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    நெகிழி பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

    By  போளூர்,  |   Published on : 26th July 2018 09:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விவசாயத்தை பெருக்கவும், மண் வளத்தை காக்கவும் பொதுமக்கள் நெகிழிப் (பிளாஸ்டிக) பொருள்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி அறிவுறுத்தினார்.
     கலசப்பாக்கம் வட்டம், கடலாடி ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்துப் பேசியதாவது:
     திருவண்ணாமலை மாவட்டம் விவசாயம் சார்ந்த பகுதியாகும். விவசாயத்தை பெருக்கவும், மண் வளத்தை பாதுகாக்கவும் நெகிழி பொருள்களை பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும், குறைந்த நீரில் 3 போக சாகுபடி செய்ய நவீன முறையில் விவசாயம் மேற்கொள்ள வேண்டும்.
     குழந்தைகளுக்கு பெற்றோர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ரூ.34 கோடியில் செண்பகத்தோப்பு அணை சீரமைக்கப்பட உள்ளது. மேலும், ஏரி, குளங்கள் தூர்வாரப்பட உள்ளன. செங்கம் - ஜமுனாமரத்தூர் இடையிலான சாலை மேம்படுத்தப்படும் என்றார்.
     முகாமில் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் , தனித்துணை ஆட்சியர் உமாமகேஸ்வரி, வட்டாட்சியர் லலிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட வழங்கல் அலவலர் வைதேகி வரவேற்றார்.
     இதில், 861பேருக்கு பட்டா மாற்றம், பட்டா, உதவித்தொகை உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளும், மாவட்டப் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் 4 பேருக்கு இஸ்திரிப் பெட்டிகளும், கூட்டுறவுத் துறை சார்பில் மகளிர் குழுவினருக்கு கடனுதவியும், மாவட்ட தொழில் மையம் சார்பில் நலத் திட்ட உதவிகளும், மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் மகளிருக்கு இரு சக்கர வாகனம் என மொத்தம் 946 பேருக்கு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வழங்கினர்.
     அதிமுக மாவட்ட துணைச் செயலர் துரை, பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் ஜெயசுதா, நெடுஞ்சாலைத் துறை உதவிச் செயற்பொறியாளர் ரவி, உதவிப் பொறியாளர் அற்புதநாதன், கடலாடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மணிகண்டபிரபு, வருவாய் ஆய்வாளர்கள் புவனேஸ்வரி, காளிதாஸ், கிராம நிர்வாக
     அலுவலர் வெங்கடேசன், விஜயலட்சுமி மற்றும் வருவாய்த் துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai