Enable Javscript for better performance
மருத்துவ அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதாரம், குடும்ப நலத் துறையின் மருத்துவ அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர்கள் ஆர்.மீரா, வி.கோவிந்தன், அன்பரசி, அசோக்குமார், கார்த்தி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     கூட்டத்தில், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் புறநோயாளிகள், உள்நோயாளிகள், பிரசவங்கள் மற்றும் குடும்பநல அறுவைச் சிகிச்சை, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai