Enable Javscript for better performance
அங்கன்வாடி பணியாளர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறு ஒன்றியத்தில் வியாழக்கிழமை அங்கன்வாடி பணியாளர்களுக்கு குழந்தைகளுக்கான முன்பருவ கல்வி குறித்த புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.
    ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டு நிறுவனம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் இணைந்து நடத்திய இந்தப் பயிற்சிக்கு தொண்டு நிறுவன திட்ட மேலாளர் ஜெபஸ்டின் முன்னிலை வகித்தார்.
    சுகாதாரத் திட்ட மேலாளர் லாசர் குழந்தைகளுக்கான அறிவு வளர்ச்சி, உடல் வளர்ச்சி, உடல் இயக்க வளர்ச்சி, மனயெழுச்சி வளர்ச்சி ஆகியவற்றைக் குறிக்கும் அங்கன்வாடி பாடத் திட்டத்தை ஆடல், பாடல், கதை மற்றும் காணொலி மூலம் எடுத்துரைத்தார்.
    மேலும், செலவில்லாமல் அங்கன்வாடியில் இருக்கக்கூடிய பொருள்களை வைத்தே குழந்தைளின் முன்பருவ வளர்ச்சியை தூண்டும் செயலாக்க முறைகளை விளக்கினார்.
    சுகாதாரத் திட்ட மேலாளர் ராஜசேகரன் அங்கன்வாடி அளவிலான கண்காணிப்பு மற்றும் ஆதரவு குழு உருவாக்குவதைப் பற்றியும், அதனால் உருவாகப்போகும் நல்விளைவுகள் பற்றியும் எடுத்துரைத்தார். இதில், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா சுகாதாரத் திட்ட உதவித் திட்ட மேலாளர் ஆனந்தன், அங்கன்வாடி பணியாளர் ஆனந்தி, தாய்மார்கள் குழு ஊக்குநர், அங்கன்வாடி பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai