Enable Javscript for better performance
அதிமுக சார்பில் ஆகஸ்ட் 8-இல் மாபெரும் சைக்கிள் பேரணி: இடத்தை தேர்வு செய்த அமைச்சர்- Dinamani

சுடச்சுட

    

    அதிமுக சார்பில் ஆகஸ்ட் 8-இல் மாபெரும் சைக்கிள் பேரணி: இடத்தை தேர்வு செய்த அமைச்சர்

    By DIN  |   Published on : 27th July 2018 10:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக சார்பில் வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி மாபெரும் சைக்கிள் பேரணி தொடங்கவுள்ள நிலையில், பேரணி ஆரம்பிக்கும் இடத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வியாழக்கிழமை தேர்வு செய்தார்.
    திருவண்ணாமலை மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை சார்பில், அதிமுக அரசின் சாதனைகளை விளக்கும் மாபெரும் சைக்கிள் பேரணி வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தப் பேரணியில் பேரவை நிர்வாகிகள், அதிமுக நிர்வாகிகள், பிற அணி நிர்வாகிகள் என 1,000 பேர் பங்கேற்க உள்ளனர்.
    இந்தப் பேரணி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி, செய்யாறு, வந்தவாசி, திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம், செங்கம், போளூர் ஆகிய 8 தொகுதிகளிலும் 4 நாள்கள் நடைபெறவுள்ளது. சைக்கிள் பேரணி குறித்து அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கூறியதாவது:
    அதிமுக ஜெயலலிதா பேரவை சார்பில், அதிமுக அரசின் சாதனைகளை விளக்கும் மாபெரும் சைக்கிள் பேரணி வரும் ஆகஸ்ட் 
    8-ஆம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் மாலையில் தொடக்க நிகழ்ச்சி மட்டும் நடைபெறும். ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை 4 நாள்கள் சைக்கிள் பேரணி நடைபெறும். இந்தப் பேரணி ஆரணி தொகுதியில் உள்ள சேவூரில் தொடங்கப்படவுள்ளதால், தற்போது அதற்கான மேடை அமைக்கும் இடம், சைக்கிள்களை நிறுத்துமிடம், நெடுஞ்சாலையில் 100 அடி உயரத்துக்கு கொடிக்கம்பம் அமைத்து அதிமுக கொடியேற்றவுள்ள இடம் ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன. சைக்கிள் பேரணி தொடக்க விழாவில் பங்கேற்கும் அமைச்சர்கள் குறித்த விவரம் பின்னர் தெரிவிக்கப்படும் என்றார். உடன், அரசு வழக்குரைஞர் க.சங்கர், ஒன்றியச் செயலர் பிஆர்ஜி.சேகர், மேற்கு ஆரணி ஒன்றியச் செயலர் எம்.வேலு, முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் சேவூர் ஜெ.சம்பத், அதிமுகவைச் சேர்ந்த குப்பன், தவமணி, கைலாசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai