Enable Javscript for better performance
அப்துல் கலாம் நினைவு தின நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையம், வந்தவாசி ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப் பள்ளி சார்பில், அப்துல் கலாம் நினைவு தின நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
    நிகழ்ச்சிக்கு ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் தலைமை வகித்தார். வந்தவாசி கூடுதல் வட்டாரக் கல்வி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, அரிமா சங்க மாவட்டத் தலைவர் எ.விஜயன், வந்தவாசி ஆசியன் மெடிக்கல் அகாதெமி இயக்குநர் பீ.ரகமத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியை எ.சித்ரா வரவேற்றார். அப்துல் கலாம் குறித்து வந்தவாசி வட்டாரக் கல்வி அலுவலர் செல்லப்பன் சிறப்புரை ஆற்றினார். மேலும், மாணவர்களுக்கு அவர் மரக்கன்றுகளை வழங்கினார்.
    அப்துல் கலாம் குறித்து கவிஞர் சு.அகிலன் பாடல்களைப் பாடினார். நிகழ்ச்சியில் கிஷோர்குமார், ராஜ்குமார், சதானந்தன், கேசவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளி ஆசிரியை எ.கண்மணி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai