Enable Javscript for better performance
கரும்பு நிலுவைத் தொகை: போளூரில் முத்தரப்பு பேச்சுவார்த்தை- Dinamani

சுடச்சுட

    

    கரும்பு நிலுவைத் தொகை: போளூரில் முத்தரப்பு பேச்சுவார்த்தை

    By DIN  |   Published on : 27th July 2018 10:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போளூரை அடுத்த கரைப்பூண்டியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்க வேண்டி உள்ள நிலையில், இது தொடர்பாக போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முத்தரப்பு  பேச்சுவார்த்தை  வியாழக்கிழமை நடைபெற்றது.
    போளூரை அடுத்த கரைப்பூண்டி ஊராட்சியில் தனியார் சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. 
    இந்த ஆலைக்கு போளூர், சேத்துப்பட்டு, ஜவ்வாதுமலை, கலசப்பாக்கம், ஆரணி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் 2017 - 2018ஆம் ஆண்டுக்கான அரைவைப் பருவத்துக்கு 2017 நவம்பர் முதல் 2018 மார்ச் வரை கரும்பை வெட்டி அனுப்பி வைத்தனர்.
    இந்த விவசாயிகளுக்கு கடந்த 8 மாதங்களாக கரும்புக்கான தொகையை ஆலை நிர்வாகம் நிலுவை வைத்துள்ளதாம். இதனைக் கண்டித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அண்மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ஆரணி வருவாய்க் கோட்டாட்சியர் (பொறுப்பு) பானு, டிஎஸ்பி சின்னராஜ், வட்டாட்சியர் தியாகராஜன், சர்க்கரை ஆலை பொது மேலாளர் கந்தசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வரும் வியாழக்கிழமை (ஜூலை 26) வட்டாட்சியர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி, அதில் கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்கும் தேதியை எழுத்துப்பூர்வமாக அறிவிப்பதாக ஆலை நிர்வாகம் தெரிவித்ததால் ஆர்ப்பாட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
    அதன்படி, வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் 
    சங்கப் பிரதிநிதிகள் மணி, பாலமுருகன் உள்ளிட்டோரும், டிஎஸ்பி சின்னராஜ், வட்டாட்சியர் தியாகராஜன், சர்க்கரை ஆலை பொது மேலாளர் கந்தசாமி, உதவி மேலாளர் ராஜூ ஆகியோரும் கலந்து கொண்டனர். அப்போது, வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் கரும்புக்கான நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு வழங்குவதாக தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் 
    உறுதியளித்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai