Enable Javscript for better performance
கல்யாணபுரீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    போளூரை அடுத்த வசூர் ஊராட்சியில் அமைந்துள்ள கல்யாணபுரீஸ்வரர் கோயிலில் புதன்கிழமை  பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
    வசூர் ஊராட்சியில் அமைந்துள்ள கல்யாணபுரீஸ்வரர் கோயிலில் ஆடி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, சுவாமிக்கு பல்வேறு வாசனைத் திரவியங்களைக்  கொண்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
    பின்னர், நந்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டன. நிகழ்ச்சியில் போளூர், வசூர், காங்கேயனூர், குருவிமலை உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai