Enable Javscript for better performance
குடிநீர் பிரச்னை: திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    குடிநீர் பிரச்னை: திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை 

    By DIN  |   Published on : 27th July 2018 10:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலையை அடுத்த கீழ்கரிப்பூர் அருந்ததி காலனி பகுதியில் குடிநீர் பிரச்னையைத் தீர்க்கக் கோரி, அந்தப் பகுதி மக்கள் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவண்ணாமலையை அடுத்த கீழ்கரிப்பூர் கிராமத்தில் 3 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் உள்ளன. இதில், ஒரு தொட்டி அருந்ததி காலனியில் உள்ளது. இந்தத் தொட்டிக்கு வரும் குழாயில் சிலர் துளையிட்டு தண்ணீர் பிடித்து வருவதால், அருந்ததி காலனியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இந்த நிலையில், கீழ்கரிப்பூர் அருந்ததி காலனி மக்கள் சுமார் 50 பேர் வியாழக்கிழமை திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனர். அந்த மனுவில், அருந்ததி காலனியில் உள்ள குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் வருவதில்லை. வேண்டுமென்றே சிலர் இந்தப் பகுதிக்கு தண்ணீர் கிடைக்கவிடாமல் செய்கின்றனர். 
    இதற்கு கீழ்கரிப்பூர் ஊராட்சிச் செயலர் உடந்தையாக இருந்து வருகிறார் என குறிப்பிட்டிருந்தனர்.
    தொடர்ந்து, அவர்கள் அலுவலக வாயில் முன் தரையில் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் வி.அண்ணாமலை, மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai