Enable Javscript for better performance
கூட்டுப் பண்ணையம் குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    கூட்டுப் பண்ணையம் குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி

    By DIN  |   Published on : 27th July 2018 10:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செய்யாறை அடுத்த கோவிலூர் கிராமத்தில் கூட்டுப் பண்ணையம் குறித்து விவசாயிகளுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
    அனக்காவூர் வட்டார வேளாண் மையம் சார்பில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ், கூட்டுப் பண்ணையம் குழு உறுப்பினர்களைக் கொண்டு இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது.
    இதில், திருவண்ணாமலை உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா)  துணை இயக்குநர் துரைசாமி விவசாயிகள் ஆர்வலர் குழுக்கள் அமைப்பது, விவசாயிகள் உற்பத்திக் குழுக்கள் தொடங்குவது குறித்து பயிற்சி அளித்தார்.
    மேலும், குழு உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து ரூ.10 
    ஆயிரம் மதிப்பில் குறைந்த விலையிலான இடுபொருள்களை வாங்குபவர்களுக்கு மட்டும் 
    ரூ.5 லட்சம் மதிப்பில் அரசின் மானியத்தில் வழங்கப்படும் இயந்திரங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.
    அனக்காவூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி, குழு பதிவேடுகளை பராமரித்தல், கூட்டங்கள் நடத்தி தீர்மானம் நிறைவேற்றுதல் போன்ற பல தகவல்களையும், வட்டார தொழில்நுட்ப மேலாளர் டி.என்.ஆனந்குமார், விவசாய உற்பத்தியாளர் குழு அமைத்தல், நிர்வாகிகளைத் தேர்வு செய்தல், குழுவுக்கான வங்கிக் கணக்கு தொடங்குதல் குறித்தும், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ச.ஜெயராஜ், ஜெனிபர் ஆகியோர் குழுவின் வங்கிக் கணக்கு தொடங்குதல் குறித்தும் பயிற்சி அளித்தனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் பாதுஷா மற்றும் துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai