Enable Javscript for better performance
மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் சார்பில், மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி திட்டத்தின்கீழ், தேசூரில் அண்மையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
    இந்தத் திட்டத்தின்கீழ், தெள்ளாறு வட்டார வளமையத்தில் வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த மருத்துவ முகாம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த ஊர்வலம் நடைபெற்றது.
    தெள்ளாறு வட்டார வளமைய மேற்பார்வையாளர் த.குணசேகரன் ஊர்வலத்தை தொடக்கிவைத்தார். தேசூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் அனந்தராஜ் முன்னிலை வகித்தார்.
    பள்ளி வளாகத்திலிருந்து தொடங்கிய ஊர்வலம், தேரடி, பெரிய தெரு உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்றது. ஊர்வலத்தில் மருத்துவ முகாம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை மாணவர்கள் ஏந்திச் சென்றனர்.
    இதில், திட்ட ஒருங்கிணைப்பாளர் இந்துமதி, ஆசிரிய பயிற்றுநர் லோ.ராஜா மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், மாற்றுத் திறனாளி மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai