Enable Javscript for better performance
அப்துல் கலாம் நினைவு தினம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் அப்துல் கலாமின் நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
    நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவர் எம்.என்.பழனி தலைமை வகித்தார். செயலரும், தாளாளருமான என்.குமார், பொருளாளர் கோ.ராஜேந்திரகுமார், முதல்வர் கே.ஆனந்தராஜ், கல்விப் புல முதன்மையர் அழ.உடையப்பன் ஆகியோர் 
    முன்னிலை வகித்தனர்.
    அப்துல் கலாம் படத்துக்கு கல்லூரி நிர்வாகிகள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    தொடர்ந்து, அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் கவிதைகள், பாடல்கள் வெளியிடப்பட்டன. நிகழ்ச்சியில், திரளானோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai