Enable Javscript for better performance
அம்மா திட்ட முகாமில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    போளூரை அடுத்த குப்பம், செங்கத்தை அடுத்த மேல்செங்கம் ஊராட்சிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் 73 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    போளூரை அடுத்த குப்பம் ஊராட்சியில் நடைபெற்ற முகாமுக்கு வட்டாட்சியர்  தியாகராஜன் தலைமை வகித்து, பல்வேறு நலத் திட்ட உதவிகள் கோரி பொதுமக்கள் அளித்த 78 மனுக்களை பெற்றார்.
    முகாமில், சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலர் மணி, மண்டல துணை வட்டாட்சியர் முனிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் அருள்குமார் வரவேற்றார். 
    சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு 38 பேருக்கு தோராயப் பட்டா, பட்டா மாற்றம், உதவித்தொகை, வண்டல் மண் அள்ளுவதற்கான அனுமதிச் சான்று உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
    கிராம நிர்வாக அலுவலர்கள் மகாலிங்கம், சசிகுமார், கோவிந்தராஜ், அனந்தவல்லி, காயத்திரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    செங்கம்: செங்கத்தை அடுத்த மேல்செங்கம், பக்கிரிபாளையம், காந்தி நகர், பக்கிரிபாளையம்புதூர் ஆகிய கிராமங்களுக்கான அம்மா திட்ட முகாம் மேல்செங்கம் கிராமத்தில் நடைபெற்றது.
    முகாமில், பொதுமக்கள் 60 மனுக்களை அளித்தனர். தொடர்ந்து, வட்டாட்சியர் ரேணுகா, 35 பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். இதில், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ஈஸ்வரன், வருவாய் ஆய்வாளர் லதா, கிராம நிர்வாக அலுவலர்கள் திருமால் உள்பட வருவாய்த் துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai