Enable Javscript for better performance
கல்லூரியில் டெங்கு கொசு ஒழிப்புப் பணி- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் டெங்கு கொசு ஒழிப்புப் பணி வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
    நாவல்பாக்கம் வட்டார மருத்துவமனை அலுவலர் பழனி தலைமையில், சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோ, சுகாதார ஆய்வாளர்கள் ஏழுமலை, அசோகன் ஆகியோர் முன்னிலையில் இந்தப் பணி நடைபெற்றது. இதையொட்டி, கல்லூரிப் பகுதியில் திருவத்திபுரம் நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் ஒத்துழைப்புடன் கொசுப்புழு ஒழிப்பு புகை மருந்தை அடித்து பணியை மேற்கொண்டனர்.
    கல்லூரி முதல்வர் க.எழிலன் மேற்பார்வையில் நடைபெற்ற டெங்கு கொசு ஒழிப்புப் பணியில், கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள், என்.சி.சி. அலுவலர் சுப்பிரமணி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai