Enable Javscript for better performance
குடிநீர் பிரச்னை: ஆட்சியர் அலுவலகம் எதிரே கிராம மக்கள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    குடிநீர் பிரச்னை: ஆட்சியர் அலுவலகம் எதிரே கிராம மக்கள் போராட்டம்

    By DIN  |   Published on : 28th July 2018 08:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணக் கோரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே போளூரைச் சேர்ந்த கிராம மக்கள், காலிக் குடங்களுடன் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    போளூர் வட்டம், கருங்காலிகுப்பம் கிராமத்தில் 350 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள 2 ஆழ்துளை கிணறுகள் மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இவற்றில் ஒரு ஆழ்துளை கிணற்றில் ஏப்ரல் மாதம் தண்ணீர் வற்றிவிட்டது.
    மற்றொரு ஆழ்துளை கிணற்றில் சில தினங்களுக்கு முன்பு தண்ணீர் வற்றியது. இதனால் குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கிராம மக்கள் முறையிட்டனர். ஆனாலும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லையாம்.
    இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெள்ளிக்கிழமை காலிக் குடங்களுடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சாலை மறியலிலும் ஈடுபட முயன்றனர். தகவலறிந்து வந்த போலீஸார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதையடுத்து, குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு புறப்பட்டுச் சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai