Enable Javscript for better performance
கூட்டுறவு பட்டயப் பயிற்சிக்கு ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    கூட்டுறவு பட்டயப் பயிற்சிக்கு ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 28th July 2018 08:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலையில் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப் பயிற்சிக்கு வரும் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையம் சார்பில், முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி 2018-19ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் ஜூலை 26 என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
    தற்போது இந்தக் காலக்கெடு ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வரை 04175 - 254793, 9841113986 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் பா.ரேணுகாம்பாள் தெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai