Enable Javscript for better performance
சொத்து வரி உயர்வை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சொத்து வரி உயர்வை கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்பட உள்ளாட்சி அமைப்புகளுக்கு உள்பட்ட பகுதிகளில் சொத்து வரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வை திரும்பப் பெறக் கோரி, திமுக சார்பில் தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் முன் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திருவண்ணாமலை தொகுதி எம்எல்ஏ எ.வ.வேலு தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் கு.பிச்சாண்டி (கீழ்பென்னாத்தூர்), மு.பெ.கிரி (செங்கம்), கே.வி.சேகரன் (போளூர்), மாவட்ட துணைச் செயலர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன், எ.வ.வே.கம்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டதைக் கண்டித்தும், இந்த வரி உயர்வை திரும்பப் பெறக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
    இதில், நகராட்சி குழுத் தலைவர் குட்டி க.புகழேந்தி, அனைத்து அமைப்புசாரா தொழில் சங்கங்களின் மாவட்டத் தலைவர் எ.ஏ.ஆறுமுகம் மற்றும் திமுக நிர்வாகிகள், வியாபாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    வந்தவாசி: சொத்து வரி உயர்வைக் கண்டித்து, வந்தவாசி திமுக சார்பில், நகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்துக்கு வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் கே.ஆர்.சீதாபதி, மாவட்ட துணைச் செயலர் எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஒன்றியச் செயலர்கள் டி.டி.ராதா, ப.இளங்கோவன், எஸ்.சுரேஷ்கமல், நகரச் செயலர் கோட்டை பாபு, பொதுக்குழு உறுப்பினர் வி.ராமு, ஒன்றியப் பொறியாளர் அணி அமைப்பாளர் எ.எஸ்.பிரபு,  மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஈ.மணிகண்டன், தொகுதி அமைப்பாளர்கள் சி.ஆர்.பெருமாள், டி.பாலாஜி, ஒன்றிய துணைச் செயலர் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    ஆரணி: சொத்து வரி உயர்வைக் கண்டித்து, ஆரணியில் திமுக சார்பில், நகராட்சி  அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர் ஆர்.சிவானந்தம் தலைமை வகித்தார். இதில், முன்னாள் எம்எல்ஏ தயாநிதி, நகரச் செயலர் ஏ.சி.மணி, ஒன்றியச் செயலர்கள் தட்சிணாமூர்த்தி, அன்பழகன், வெள்ளைகணேசன், சுந்தர், இலக்கிய அணி மாவட்டச் செயலர் விண்ணமங்கலம் ரவி, முன்னாள் ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் ஜி.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    முன்னதாக, ஆரணி அண்ணா சிலை அருகிலிருந்து திமுகவினர் ஊர்வலமாக நகராட்சி அலுவலகம் வரை சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai