Enable Javscript for better performance
துரிஞ்சாவரம் ஸ்ரீசுயம்பு கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    துரிஞ்சாவரம் ஸ்ரீசுயம்பு கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா

    By DIN  |   Published on : 28th July 2018 08:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்கத்தை அடுத்த மேல்செங்கம் துரிஞ்சாவரம் ஸ்ரீசுயம்பு கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவின் 10-ஆம் நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    இதேபோல, வந்தவாசி கோமுட்டி குளக்கரையில் உள்ள ஓம் ஸ்ரீஜெய்சக்தி பீட ஸ்ரீகாளியம்மன் கோயிலில் ஆடி 2-ஆம் வெள்ளி விழா நடைபெற்றது. 
    மேல்செங்கம் துரிஞ்சாவரம் ஸ்ரீசுயம்பு கோட்டை மாரியம்மன் கோயிலில் 42-ஆம் ஆண்டு ஆடித் திருவிழா கடந்த 18-ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், காப்பு கட்டுதல், மேல்செங்கம் ஆற்றங்கரையில் கரகம் ஜோடித்து சக்தி அழைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
    தொடர்ந்து, தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், ஊரணி பொங்கல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. இரவு செந்தமிழ்ச் செல்வன் ம.தனஞ்செயன் பல்வேறு தலைப்புகளில் ஆன்மிகச் சொற்பொழிவாற்றினார்.
    10-ஆம் நாள் திருவிழா வெள்ளிக்கிழமை காலை கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதையொட்டி, ஊர் மக்கள் சுவாமிக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்தார். அப்போது, பொதுமக்கள் வீடுகள்தோறும் அம்மனுக்கு தேங்காய் உடைத்து வழிபட்டனர்.
    வந்தவாசி: வந்தவாசி கோ
    முட்டி குளக்கரையில் உள்ள ஓம் ஸ்ரீஜெய்சக்தி பீட ஸ்ரீகாளியம்மன் கோயிலில் ஆடி 2-ஆம் வெள்ளியை ஒட்டி, அம்மனுக்கு எலுமிச்சைப் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. முன்னதாக, காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, சுமார் 6 ஆயிரம் எலுமிச்சை பழங்களால் அம்மனுக்கு சிறப்பாக அலங்காரம் செய்திருந்தனர். கோயில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai