Enable Javscript for better performance
படவேட்டில் காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல்: கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    படவேட்டில் காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல்: கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை

    By DIN  |   Published on : 28th July 2018 08:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போளூரை அடுத்த படவேடு ஊராட்சியில் வெள்ளிக்கிழமை ரூ.15 ஆயிரம் மதிப்பிலான காலாவதியான, தேதி குறிப்பிடாத உணவுப் பொருள்களை உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்து அழித்தனர்.
    மேலும், தேதி குறிப்பிடாத, தரமில்லாத உணவுப் பொருள்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளர்களிடம் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் எச்சரித்தனர்.
    போளூரை அடுத்த படவேடு ஊராட்சியில் அமைந்துள்ள படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் ஆடி வெள்ளி விழா கடந்த 20-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தக் கோயிலில் 2-ஆம் ஆடி வெள்ளி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவையொட்டி, பலகாரக் கடைகள், உணவகங்கள், சிறு கடைகள் என பல்வேறு விதமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
    இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவின்பேரில், மாவட்ட நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில், மூத்த உணவு பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன் ,போளூர் உணவு பாதுகாப்பு அலுவலர் பாஸ்கரன் ஆகியோர் படவேடு ஊராட்சியில் உள்ள கடைகளில் ஆய்வு வெள்ளிக்கிழமை திடீரென மேற்கொண்டனர்.
    அப்போது, காலாவதியான, கெட்டுப்போன உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டதுடன், தேதி குறிப்பிடாத, 
    தரமில்லாத உணவுப் பொருள்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளர்களிடம் எச்சரித்தனர்.
    மேலும், ரூ.15 ஆயிரம் மதிப்பிலான காலாவதியான, தேதி குறிப்பிடாமல் இருந்த உணவுப் பொருள்களை உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்து அழித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai