Enable Javscript for better performance
மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சார்பில், மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி திட்டத்தின் கீழ், 
    மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் வந்தவாசியில் அண்மையில் நடைபெற்றது.
    வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமை மாற்றுத் திறனாளிகள் மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கர் தொடக்கிவைத்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் மீனா, பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    மருத்துவர்கள் சித்ரா, கலைச்செல்வி, புகழேந்தி, பாலாஜி, ஜனார்த்தனன் ஆகியோர் மாற்றுத் திறனாளிகளை பரிசோதித்தனர். முகாமில், 60 பேருக்கு தேசிய மாற்றுத் திறனாளி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.  மேலும், உபகரணங்கள் பெற 47 பேரும், மாற்றுத் திறனாளி உதவித்தொகை பெற 40 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். 
    ஒன்றிய மாற்றுத் திறனாளிகள் ஒருங்கிணைப்பாளர் அரிகிருஷ்ணன் நன்றி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai