Enable Javscript for better performance
மூட்டை சரிந்து ரேஷன் கடை ஊழியர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறு அருகே லாரியில் இருந்து மூட்டைகள் சரிந்து விழுந்ததில் நியாயவிலைக் கடை ஊழியர் உயிரிழந்தார்.
    செய்யாறை அடுத்த சிறுங்கட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (45). இவர், அழிவிடைத்தாங்கி கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார்.
    இந்த நிலையில், பாப்பாந்தாங்கலில் உள்ள சேமிப்புக் கிடங்கில் இருந்து அரிசி, பருப்பு, சர்க்கரை ஆகிய உணவுப் பொருள்களை சுப்பிரமணியன் கடந்த செவ்வாய்க்கிழமை லாரியில் ஏற்றி வந்து அழிவிடைத்தாங்கியிலுள்ள நியாயவிலைக் கடையில் இறக்கிக் கொண்டிருந்தார். அப்போது, லாரியில் இருந்து மூட்டைகள் சரிந்து விழுந்ததில் சுப்பிரமணியன் பலத்த காயமடைந்ததாகத் தெரிகிறது.
    உடனடியாக அவர் மீட்கப்பட்டு, வெம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுப்பிரமணியன், அங்கு வியாழக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து, திருப்பனமூர் நியாயவிலைக் கடை விற்பனையாளர் ராஜேந்திரன், தூசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்
    பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai