அரசுப் பள்ளியில் கலாமுக்கு நினைவஞ்சலி
By DIN | Published on : 29th July 2018 12:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவண்ணாமலையை அடுத்த சாவல்பூண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அப்துல் கலாமின் 3-ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் வெ.சரவணன் தலைமை வகித்தார். கலாம் படத்துக்கு ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். கலாமின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையிலான கவிதை, பாடல்கள் வெளியிடப்பட்டன.