Enable Javscript for better performance
ஆடி 2-ஆம் வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    ஆடி மாதம் 2-ஆம் வெள்ளிக்கிழமையையொட்டி, வந்தவாசி, போளூர் பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் வெள்ளிக்கிழமை மாலையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
    வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆடி 2-ஆம் வெள்ளி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. அம்மன் குதிரை வாகனத்தில் ரேணுகா பரமேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.
    இரவு கோயில் வளாகத்தில் அம்மன் வீதியுலா, அன்னதானம் உள்ளிட்டவை நடைபெற்றன. விழாவில், கோயில் அறக்கட்டளைச் செயலர் ஆறு.இலட்சுமண சுவாமிகள் மற்றும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.
    போளூர்: இதேபோல, போளூரை அடுத்த படவேட்டில் அமைந்துள்ள படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் ஆடி 2-ஆம் வெள்ளியையொட்டி, வெள்ளிக்கிழமை காலை முதல் இரவு வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில், வெளியூர், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
    மாலையில் துர்கை அலங்காரத்தில் சுவாமி அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai