Enable Javscript for better performance
ஆத்துரை ஸ்ரீகாளியம்மன் கோயிலுக்கு 108 பால்குட ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    சேத்துப்பட்டை அடுத்த ஆத்துரை ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீகாளியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் சனிக்கிழமை 108 பால்குடங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
    ஆத்துரை ஊராட்சியில் பழைமைவாய்ந்த ஸ்ரீகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆடி 2-ஆம் வெள்ளிக்கிழமையையொட்டி, வெள்ளிக்கிழமை காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆரானைகள், கூழ்வார்த்தல் விழா நடைபெற்றன. மாலையில் ஊரணி பொங்கல் நிகழ்ச்சியும், ஊர்வலமும் நடைபெற்றன.
    தொடர்ந்து, சனிக்கிழமை காலை பக்தர்கள் 108 பால்குடங்களை தலையில் சுமந்தபடி ஊர்வலமாகச் சென்று அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். இதில், ஆத்துரை, காந்திநகர், மூலப்புரவடை, ஊத்தூரான்புரவடை உள்பட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai