Enable Javscript for better performance
எஸ்.வி.நகரம் அணை ரூ.90 லட்சத்தில் சீரமைக்கப்படும்: அமைச்சர் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    எஸ்.வி.நகரம் அணை ரூ.90 லட்சத்தில் சீரமைக்கப்படும்: அமைச்சர் தகவல்

    By DIN  |   Published on : 29th July 2018 12:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் அணை ரூ.90 லட்சத்தில் சீரமைக்கப்படவுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கூறினார்.
    ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு அணைக்கட்டு கட்டப்பட்டது. இந்த அணையில் உள்ள 2 கதவுகள் (ஷட்டர்கள்) உள்ளிட்டவை பழுதடைந்து இருந்ததால், கமண்டல நாக நதியில் இருந்து வரும் தண்ணீரை ஏரிகளுக்கு திருப்பிவிட முடியாத சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக இந்த அணை பயன்பாடு இல்லாமல் இருந்து வந்தது.
    இதையடுத்து, அணையை சீரமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு அந்தப் பகுதி விவசாயிகள் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரனிடம் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து, இந்த அணையை சீரமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். அந்தப் பணிகள் முடிவடைந்த நிலையில், எஸ்.வி.நகரம் அணைக்கு அதிகாரிகளுடன் சனிக்கிழமை சென்று அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
    எஸ்.வி.நகரம் அணை ரூ.90 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட உள்ளது. இந்த அணையின் நீளம் 94.5 மீட்டர். இதில் உள்ள 2 கால்வாய்கள் மூலம் ஆரணி பகுதியில் உள்ள 3 ஏரிகளுக்கும், ஆற்காடு வட்டத்திலுள்ள 10 ஏரிகளுக்கும், செய்யாறு பகுதியில் உள்ள 8 ஏரிகளுக்கும், சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஒரு ஏரிக்கும் என மொத்தம் 22 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும். இதன் மூலம் சுமார் 3,500 ஏக்கர் பரப்பளவு நிலங்கள் பாசன வசதி பெறும் என்றார்.
    உடன், உதவிப் பொறியாளர் ஆர்.சிவக்குமார், உதவிச் செயற்பொறியாளர் அறிவழகன், செயற்பொறியாளர் மணிமோகன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் க.சங்கர், ஒன்றியச் செயலர்கள் பிஆர்ஜி.சேகர், எம்.வேலு, நகர நிர்வாகி பாரி பி.பாபு, முன்னாள் தலைவர் வாசு, அதிமுகவினர் குமரன், வேலன், சதீஷ், மற்றும் ஏரி தண்ணீரை பயன்படுத்தும் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் இருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai