கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
By DIN | Published on : 29th July 2018 12:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவண்ணாமலை நகர திமுக சார்பில், திமுக தலைவர் கருணாநிதியின் 95-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டப் பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், பொதுக்குழு உறுப்பினர் ந.பொன்னுசாமி, நகராட்சி குழுத் தலைவர் குட்டி க.புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகரச் செயலர் ப.கார்த்திவேல்மாறன் வரவேற்றார். கவிஞர் மனுஷ்யபுத்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், மாவட்ட துணைச் செயலர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன், மாவட்ட அமைப்பாளர்கள் மருத்துவர் எ.வ.வே.கம்பன், கே.வி.மனோகரன், டி.வி.எம்.நேரு, சேஷா.திருவேங்கடம், மெய்யூர் சந்திரன், ஒன்றியச் செயலர்கள் கோ.ரமேஷ், த.ரமணன், ஆராஞ்சி.ஆறுமுகம், அனைத்து அமைப்புசாரா தொழில் சங்கங்களின் மாவட்டத் தலைவர் ஏ.எ.ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.