Enable Javscript for better performance
கல்லூரி மாணவி தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலையில் வீட்டு மாடியில் இருந்து கீழே குதித்த கல்லூரி மாணவி உயிரிழந்தார்.
    திருவண்ணாமலை மின் நகர் பகுதியைச் சேர்ந்த குடிநீர் கேன் விநியோகம் செய்யும் தொழிலாளி வெங்கடேசன் (47). இவரது மகள் திவ்யப்பிரியா (21). இவர், திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தார். வெங்கடேசனுக்கு போதிய வருமானம் இல்லாததால், திவ்யப்பிரியாவின் கல்லூரிக் கட்டணத்தை செலுத்த முடியவில்லையாம்.
    இதனால் மனமுடைந்த திவ்யப்பிரியா வீட்டின் மாடியில் இருந்து வெள்ளிக்கிழமை கீழே குதித்தாராம். இதில் பலத்த காயமடைந்த அவரை, பொதுமக்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த திவ்யப்பிரியா, சனிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai