Enable Javscript for better performance
கொருக்கை கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம்- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறை அடுத்த கொருக்கை கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் 778 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
    செய்யாறு வட்டம், கொருக்கை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ஆர்.விஜயன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.நரசிம்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவமில்லா மேற்பார்வையாளர் எம்.கோபாலகிருஷ்ணன் வரவேற்றார்.
    தலைமை வகித்த நாவல்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் எஸ்.எம்.பழநி, மருத்துவ முகாமைத் தொடக்கி வைத்தார். மருத்துவ அலுவலர் எஸ்.எம்.பழநி மேற்பார்வையில், 12 பேர் அடங்கிய மருத்துவக் குழுவினர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததுடன், மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.
    முகாமின்போது, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் அனைத்துவிதமான நோய்களுக்கும் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டதுடன், தீவிர சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். மேலும், கண் பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை, இசிஜி ஆகிய பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
    காணொளி திட்டத்தின் கீழ், பள்ளி மாணவர்கள் மூவருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டதுடன், 4 பேர் கண்புரை அறுவைச் சிகிச்சைக்கும், 11 பேர் தீவிர சிகிச்சைக்கும் பரிந்துரைக்கப்பட்டனர். ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் எஸ்.இளங்கோ மற்றும் நாவல்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தினர் செய்திருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai