Enable Javscript for better performance
சுதந்திரப் போராட்ட வீரர் அர்த்தநாரீச வர்மாவுக்கு நினைவிடம் கட்டக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    சுதந்திரப் போராட்ட வீரர் அர்த்தநாரீச வர்மாவுக்கு நினைவிடம் கட்டக் கோரிக்கை

    By DIN  |   Published on : 29th July 2018 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சுதந்திரப் போராட்ட வீரர் அர்த்தநாரீச வர்மாவுக்கு திருவண்ணாமலையில் நினைவிடம் கட்டித் தர வேண்டும் என்று அவரது 145-ஆவது ஆண்டு ஜயந்தி விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    திருவண்ணாமலையில் சுதந்திரப் போராட்ட வீரர் அர்த்தநாரீசவர்மாவின் 145-ஆவது ஆண்டு ஜயந்தி விழா, வன்னியர் குரு பூஜை சனிக்கிழமை நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு வன்னிய சத்ரியர் சங்கத்தின் நிறுவனர் அரங்க.சண்முக வர்மா தலைமை வகித்தார்.
    தொழிலதிபர் ஆர்.வடிவேல், எம்.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை பொதுச் செயலர் கே.வீரப்பன் வரவேற்றார். வன்னியர் மடாலயத் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான த.வேணுகோபால் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார்.
    இதில், விடுதலைப் போராட்ட வீரரும், வன்னியர் சமூகத்தின் பெரும் தலைவருமான ராமசாமி படையாட்சியாரின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும், கடலூர் மாவட்டத்தில் அவருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவித்த தமிழக அரசு, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது.
    அர்த்தநாரீச வர்மாவின் சமாதி உள்ள திருவண்ணாமலையில் அவருக்கு நினைவிடமும், அவர் பிறந்த ஊரான சேலத்தில் மணிமண்டபமும் கட்டித்தர வேண்டும். சேலம் விமான நிலையத்துக்கு அர்த்தநாரீச வர்மாவின் பெயரைச் சூட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    தொடர்ந்து, சாதுக்களுக்கு ஆடைதானம், அன்னதானம் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏ கோ.ரவிராஜ், வன்னிய குல சத்திரியர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் ஆறு.அண்ணல், சத்திரியர் சாம்ராஜ்யம் நிறுவனர் வ.கோ.ரங்கசாமி, அர்த்தநாரீசவர்மா பண்பாட்டு இயக்க நிர்வாகி சஞ்சீவிராயர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai