Enable Javscript for better performance
செங்கம் பகுதியில் தரமற்ற கோழி, மீன் இறைச்சிகள் விற்பனை: சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்குமா?- Dinamani

சுடச்சுட

    

    செங்கம் பகுதியில் தரமற்ற கோழி, மீன் இறைச்சிகள் விற்பனை: சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்குமா?

    By DIN  |   Published on : 29th July 2018 12:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்கம் பகுதியில் தரமற்ற கோழி, மீன் இறைச்சிகள் விற்பனை செய்யப்படுவதால் பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
    செங்கம் பகுதியில் உள்ள சில இறைச்சிக் கடைகளில் தரமில்லாத கோழி இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதேபோல, சிக்கன் 65' என்ற பெயரில் கோழி இறைச்சி மாலை வேளைகளில் செங்கத்தில் பல்வேறு இடங்களில் தள்ளு வண்டியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    இதில், சிலர் ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, தருமபுரி பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளில் இறந்த கோழிகளை குறைந்த விலைக்கு வாங்கி வந்து, கோழிகளின் இறைச்சியில் அதிகளவில் அசினம்மோட்டோ' எனப்படும் ரசாயனத்தை தடவி எண்ணெயில் பொறித்து விற்கின்றனராம்.
    எண்ணெயில் பொறித்துக் கொடுக்கப்படும் கோழி இறைச்சியை சாப்பிடும்போது சுவையாக இருப்பதாகவும், மறுநாள் காலையில் உடல் நலம் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கன்றனர்.
    இதேபோல, ஞாயிற்றுக்கிழமைகளில் செங்கம் புதிய பேருந்து நிலையம் முதல் போளூர் சாலை வரை சாலையோரம் விற்கப்படும் மீன்கள், ஒரு வாரத்துக்கு முன்னதாக பிடிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு விற்கப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
    எனவே, செங்கம் பகுதியில் உள்ள கோழி இறைச்சிக் கடைகள், சாலையோர மீன் கடைகளில் சுகாதாரத் துறையினர் திடீர் ஆய்வு செய்து, தரமற்ற இறைச்சிகளை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே செங்கம் நகர மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai