Enable Javscript for better performance
செய்யாறு அரசுக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா: எம்எல்ஏ பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறு அரசுக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா: எம்எல்ஏ பங்கேற்பு

    By DIN  |   Published on : 29th July 2018 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் எம்எல்ஏ தூசி கே.மோகன் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
    செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 17-ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் க.எழிலன் தலைமை வகித்தார். துறைத் தலைவர்களான பேராசிரியர்கள் ஆ.மூர்த்தி, இ.மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி எம்எல்ஏ தூசி கே.மோகன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை அளித்து பேசியதாவது:
    செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக 201 பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். கல்வி மட்டும் தான் ஒருவருக்கு மரியாதை கொடுக்கும். உங்களை நிலைநிறுத்துவதும் கல்வி மட்டுமே.
    கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் மாணவர்கள் மதிக்க வேண்டும். உயர் பதவிகளுக்குச் சென்று ஆசிரியர்களுக்கும், படித்த கல்லூரிக்கும் பெருமை தேடித்தர வேண்டும். வேலை வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. உங்கள் எதிர்காலத்தை நீங்கள் தீர்மானித்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றார்.
    நிகழ்ச்சியின்போது, 700 மாணவிகள் உள்பட 1,293 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில், அதிமுக நிர்வாகிகள் எம்.மகேந்திரன், அரங்கநாதன், திருமூலன், ரமேஷ், எஸ்.கிருஷ்ணன், சுதாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai