Enable Javscript for better performance
திருவண்ணாமலை மலையில் ரஷியாவைச் சேர்ந்தவர் சிக்கித் தவிப்பு?- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மலையில் ரஷியாவைச் சேர்ந்தவர் சிக்கித் தவிப்பு?

    By DIN  |   Published on : 29th July 2018 12:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மலையில் சிக்கித் தவிப்பதாக வந்த தொலைபேசி அழைப்பின்பேரில், ரஷியாவைச் சேர்ந்தவரை தேடிச் சென்ற போலீஸார் சனிக்கிழமை மாலை திரும்பி வந்தனர்.
    திருவண்ணாமலை நகர காவல் நிலையத்துக்கு சனிக்கிழமை காலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தான் ரஷிய நாட்டைச் சேர்ந்த அலெக்சாண்டர் என்றும், திருவண்ணாமலை மலை மீது வழி தெரியாமல் தவிப்பதாகவும் கூறினாராம்.
    இதையடுத்து, நகர போலீஸார் அவரைத் தேடி சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு மலை மீது சென்றனர். மலையின் பல்வேறு பகுதிகளில் தேடியும் அவர் கிடைக்காததால் மாலை 6 மணிக்கு போலீஸார் மீண்டும் இறங்கி வந்தனர்.
    எனவே, மலையில் உண்மையிலேயே ரஷியாவைச் சேர்ந்தவர் சிக்கித் தவிக்கிறாரா அல்லது யாரேனும் காவல் துறையை அலைக்கழிக்க தொலைபேசியில் அழைத்தனரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai