Enable Javscript for better performance
பசுமை வழிச் சாலைத் திட்டத்தை கைவிட வேண்டும்: இரா.முத்தரசன்- Dinamani

சுடச்சுட

    

    பசுமை வழிச் சாலைத் திட்டத்தை கைவிட வேண்டும்: இரா.முத்தரசன்

    By DIN  |   Published on : 29th July 2018 12:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை - சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாகக் கைவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
    மாநிலச் செயலர் இரா.முத்தரசன் வலியுறுத்தினார்.
    திருவண்ணாமலையில் 8 வழிச் சாலைத் திட்டம் யாருக்காக? என்பது குறித்த அனைத்து கட்சிக் பொதுக்கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்க வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
    திமுக தலைவர் கருணாநிதி நலமாக உள்ளார். அவரது உடல்நிலை குறித்து வீணாக வதந்தி பரப்பப்படுகிறது. சேலம் - சென்னை இடையிலான 8 வழிச் சாலைத் திட்டம் அனைத்துத் தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இந்தத் திட்டத்துக்கு 95 சதவீத விவசாயிகள் ஆதரவு தருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உண்மைக்கு மாறான தகவல்களை கூறி வருகிறார்.
    அவரது சொந்த மாவட்டமான சேலம் மாவட்ட விவசாயிகளை முதல்வர் நேரில் சந்தித்தால், விவசாயிகள் ஆதரவு தெரிவிக்கிறார்களா, எதிர்ப்புத் தெரிவிக்கிறார்களா என்று தெரியும்.
    இந்தத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும். சேலத்தில் திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 29) நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் 8 வழிச் சாலைக்கான எதிர்ப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai