Enable Javscript for better performance
புதுக்காமூர் ஸ்ரீமகாவீரர் ஜினாலயத்தில் விதான பூஜை- Dinamani

சுடச்சுட

    

    ஆரணி புதுக்காமூர் ஸ்ரீமகாவீரர் ஜினாலயத்தில் உலக நன்மை வேண்டி, மகா மண்டல விதான பூஜை கடந்த 20-ஆம் தேதி தொடங்கி சனிக்கிழமை வரை நடைபெற்றது.
    ஆரணி புதுக்காமூர் ஸ்ரீமகாவீரர் ஜினாலயத்தில் கடந்த 20-ஆம் தேதியன்று ஸ்ரீசாந்தகுமார்ஜி திருவறக்கொடியை ஏற்றி மகா மண்டல விதான பூஜையை தொடக்கிவைத்தார். இதில், தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம், முறைகள் பற்றி கூறப்பட்டது.
    விதான பூஜையில் மகாவீரருக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. மேலும், இந்த பூஜை உலக நலனுக்காகவும், திருவறம் செழிக்கவும் நடைபெற்றது.
    இதில், பிரதிஷ்டாசாரியர் ஸ்ரீஅபிநந்தன சாஸ்திரியார்,
    ஸ்ரீஅ.ராஜேஷ் சாஸ்திரியார் மற்றும் பிரம்மச்சாரணியார் கேமஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சனிக்கிழமை மாலை கொடி இறக்கப்பட்டு, ஸ்ரீமகாவீர் வீதியுலா நடைபெற்றது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai