Enable Javscript for better performance
ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் தேவாரப் பாடல்கள் இசைக்கும் நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் தேவாரப் பாடல்கள் இசைக்கும் நிகழ்ச்சி

    By DIN  |   Published on : 29th July 2018 12:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் பகவானின் நூற்றாண்டு விழாவையொட்டி, சனிக்கிழமை தேவாரப் பாடல்கள் இசைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    திருவண்ணாமலை - செங்கம் சாலையில் உள்ள ஆஸ்ரமத்தில் பகவான் ஸ்ரீயோகி ராம்சுரத்குமாரின் நூற்றாண்டு ஜெயந்தி விழா 2017 நவம்பர் 30-ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, 2018 டிசம்பர் மாதம் வரை நூற்றாண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, சனிக்கிழமை காலை ஸ்ரீபகவான் யோகிராம் சுரத்குமார் சன்னதியில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
    தேவாரப் பாடல்கள் இசைக்கும் நிகழ்ச்சி: ஆஸ்ரமத்தில் கடந்த 22-ஆம் தேதி முதல் சனிக்கிழமை வரை தினமும் மாலை 6.15 மணி முதல் இரவு 8.15 மணி வரை தேவாரப் பாடல்கள் இசைக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. 22, 28-ஆம் தேதிகளில் பா.சற்குருநாத ஓதுவார் தலைமையிலான குழுவினர் தேவாரப் பாடல்களை இசைத்தனர்.
    23, 24, 25, 26, 27-ஆம் தேதிகளில் ஓதுவார்கள் ராஜ்குமார், சிவகபிலன், சுவாமிநாதன், கதிர்வேல் ஆகியோர் தலைமையிலான குழுவினர் தேவாரப் பாடல்களை இசைத்தனர். இந்த நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    விழா ஏற்பாடுகளை ஆஸ்ரமத் தலைவரும், ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுமான டி.எஸ்.அருணாச்சலம், அறங்காவலர்கள் மா தேவகி, ஆர்.விஜயலட்சுமி, ஜி.ராஜேஸ்வரி, ஜி.சுவாமிநாதன், டி.எஸ்.ராமநாதன், பி.ஏ.ஜி. குமரன், டி.கணபதி சுப்பிரமணியன், தன்னார்வலர் ஆர்.எஸ்.இந்திரஜித் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai